Pages

Friday, April 20, 2018

வெள்ளவத்தையும் பணப்புழக்கமும்.

வெள்ளவத்தை : யாழ் மண்ணை விட்டு ஓடிவந்த எங்களின் கூடாரம். வெளிநாட்டுக்கு ஓடி தப்பியவர்கள் போக மீதி உயிர்வாழ்தலுக்கு உரிமையையுடைய யாழ்ப்பாணத்தார் வாழ்தலுக்கு தெரிசெய்து கொண்ட தலைநகரின் சிறு பகுதி. வெள்ளவத்தைக்கேயுரியனவான சில அழகியல் அம்சங்கள், எம்மவர்கள் வாழ்வென்று அடுக்குமாடி குடியிருப்புகள், மூலைக்கு மூலை சாப்பாட்டு கடை , மனங்கவர் புடவைக்கடைகள் , வாங்கிய வருத்தங்களுக்கு ஏற்ப மருந்தங்கள் புடைசூழயிருக்கும் வைத்தியசாலைகள் என்று ஏராளம்.

மிக சிறிய காலப்பகுதிக்குள் வானுயர்ந்து வளந்த அடுக்கு மாடிக் குடியிப்புக்கள். பூர்வீகமாக தனி வீடுகளில் வசித்து வந்தர்களின் படுக்கையறைவரை எம்மை எட்டிப்பார்க்கும் வசதியை எமக்கு ஏற்படுத்தி தந்து அவர்களின் நிம்மதியை பறித்து, எம்மை எம்மண்ணிலிருந்து வெளியேற்றியவர்களை அவர்களின் வீடுகளில் இருந்தாவது வெளியேற்றும் சிறு சந்தர்பத்தை கொடுத்த மகிழ்ச்சியில் சிலர்.தேவையின் கணதி அடுக்கு மாடி குடியிருப்பு விற்கும் வியாபாரிகளை தோற்றுவித்தது , அதிலும் எம்மவர் காசை ஏப்பம் இட்டு, ஆட்டையப் போடுவர்கள் என்று ஒரு சாரார் இப்படியாக எல்லாம் கலந்த கலவையாக வெள்ளவத்தை.

அப்படியிருக்கு வெள்ளவத்தையில் பொருடகளின் விலை பற்றித்தான் இன்றைய பேச்சு. அண்ணா அடிக்கடி சொல்லுவார் “வெள்ளவத்தையில் பொருட்கள் வாங்குவதை விடுத்து வெளியிடங்களுக்கு வாடகை வாகனம் எடுத்துச் சென்றுவரலாம்” என்று , ஆம் அப்படி விலை சொல்லுவாகள் இங்கு. இது இலங்கையில் அமைந்திருந்தாலும் விலை என்னவோ, டொலர்ஸ், பவுண்ஸில்தான் இருக்கும் என்று நகைச்சுவையாகச் சொல்லப்படும். பார்பதற்கு பொருட்கள் அழகாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும், அப்பொழுதானே சொன்ன விலைக்கு பொருட்களை வாங்குவார்கள்.

அதிலும் கடைகளிற்கு வரும் “அன்ரி” மாரின் புருசன்மார் வெளிநாட்டில இருப்பதால், அவர்களிடம் நல்ல காசிருக்கும், ஆனால் அவர்கள் வெள்ளவத்தையை விட்டு வெளிய போகமாட்டார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள், அதிக இலாபம் வைத்தே பொருட்களை அவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். அதே வேளை வெளி இடங்களுக்குச் சென்று பாசை தெரியாமல் தடுமாறி, ஏமாறுவதிலும் பார்க்க அதிக விலை கொடுத்தாவது வெள்ளவத்தையிலேயே வாங்கி விடுவதில் “அன்ரி” மாரும் முனைப்பு காட்டுவார்கள்.

இப்படியாக ஒருவர் சார்ந்த இன்னொருவர் நலனாக வெள்ளவத்தையில் பொருட்கள் யானை விலையில் விற்றுக்கொண்டுதானிருக்கின்றன...


நட்புடன் கிஷோக்குமார்

4 comments:

  1. வாயுள்ள வியாபாரிகள் கல்லா கட்டுவார்கள் நண்பரே....
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே..!

      Delete
  2. வெள்ளவித்தை குறித்த நேரடி ஒளிபரப்பு அருமை!!
    ஆமாம் .. வெட்டவிளையும் இதுவும் ஒன்றா ?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்கள் கருத்து பகிர்விற்கும் நன்றி உறவே.

      Delete

 

Sample text

Sample Text

Sample Text