// தமிழில் தட்டச்ச முடிந்த ஒரே தகுதிக்காக , நாங்களும் Blogger என்று சொல்லித்திரியும் நாதாரி நாய்கள் பற்றி என்ன சொல்வது ? //
நேற்று முகப்புத்தகத்தில் பதிந்த நிலைப்பாடு என்னையும் ஒரு blogger ஆக்கியிருக்கிறது. முதல்வன் படத்தின் கடைசி கட்டத்தில் நாயகன் அர்ஜீன் வில்லன் ரகுவரனை கொன்ற பின் ’என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டியே’ என்பது போல் ஆகிவிட்டது நிலமை.
சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான எனது சஞ்சரிப்பும் , பல வாத பிரதி வாதங்களின் பங்களிப்பும் , பார்வையிடலும் ஏதாவது எழுத வேண்டும் என்ற தேவைக்கு என்னையும் கொண்டு வந்திருக்கிறது. நல்ல இலக்கியம் கற்றுக்கொண்டோ , இலக்கணம் தெரிந்து கொண்டோ எழுதவில்லை. தமிழை வளர்க்கிறேன் , வளைக்கிறேன் என்று சபதமிட்டுக் கொண்டும் இந்த வலைப்பதிவில் இறங்கவில்லை. ஏதோ எனக்கு தெரிந்தது தமிழ் தட்டச்சல் மாத்திரமே. எழுத்துக்களை கோர்த்து சொற்களாக்கிய வாக்கியங்களை பந்தியாக்கி நானும் எழுதலாம் என்றிருக்கிறேன். வாசிப்பதற்கு ஆள் இருக்கிறதோ இல்லையோ என் திருப்திக்காக எழுதலாம் என்ற தெளிவுடனே எழுத தொடங்குவதால் , வாசகர் பார்வை எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணந்தான் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எனக்கில்லை.
அடிக்கடி நான் , எனது என்று எழுதுவது மமதையாலோ , சுயநல நோக்கிலோ இல்லை , நாம் என்று என்று நல்ல விடயங்களுக்கு சொல்லிக்கொள்ளலாம் , மற்றப்படி எனது கருத்துகளுக்கோ சிந்தனைகளுக்கோ மற்றவர்களை மாட்டிவிடக்கூடாது என்பதற்காகவேயன்றி வேறேதுமில்லை. இப் பதிவுலகிற்கு எழுதுவதில் புதியவனாக இருந்தாலும் வாசிப்பதில் மிக பழையவன் என்பதான் , இங்கே நடக்கும் சண்டைகள் சச்சரவுகள் , அரசியல்களில் இருந்து விலகியே இருக்க ஆசைப்படுகிறேன். யாரோடும் சண்டை சச்சரவுகளுக்கு போகாமல் , யார் மனதையும் நோகடிக்காமல் எழுத வேண்டும் என்றே ஆசை. கருத்து மோதல்கள் இருக்கலாம் அந்த கருத்துடையவருடனான மோதலாக அது இருக்ககூடாது என்றே நினைக்கிறேன். ஆனால் கருத்தையும் , கருத்தாளனையும் பிரித்து பார்ப்பது என்பது என்னவோ கடினமானதுதான்.
முடிந்த வரையில் தமிழை தமிழ் எழுத்துகளிலும்,வேற்று மொழிச் சொற்களை அம்மொழி எழுத்துகளிலும் எழுதுவதற்கு முயற்சிப்பதாய் உத்தேசம். ஆனால் இன்று வேற்று மொழிச் சொற்களை இனங்காண முடியாதளவிற்கு அவை எம்மொழியோடு இரண்டற கலந்து விட்டது என்பதையும் ,அதை பிரித்தறிவதில் உள்ள சிரமங்களையும் நன்கறிவேன்.
நட்புடன்
கிஷோக்குமார்.
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அமரேஷ்.
Deleteவாழ்கையே ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா? ///இதையும் தாண்டி போய் பார்க்கணும்/// வாருங்கோ வாருங்கோ ஆபீஸ் ரூம் உங்களை அன்புடன் அழைக்கின்றது... :P
ReplyDeleteவரவேற்பை பார்க்கவே பயமாயிருக்கு கோசுபா. அவசரப்பட்டிட்டமோ .. :)
Deleteடேய் நீயுமா...............
ReplyDeleteஆமாங்க சாமியோவ்..
Deleteஇன்றுதான் பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா.
Delete