Pages

Monday, July 16, 2018

ஓடிய பிரிஜ்....

நான் இரசித்த காணொளி ஒன்று உங்களின் பார்வைக்காகவும்... பிடித்து வைக்கவில்லை, அதுதான் ஓடிவிட்டது...


Sunday, July 15, 2018

மொட்டந்தலையும் அடுத்தவன் முழங்காலும்

மொட்டநதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்னடா என்றால் அடுத்தவன் முழங்காலுக்கே முடிச்சு போடுறான் நம்ம வெடியகத்தான். அவன் வீட்டு அடுப்பு எரியவில்லை என்றால் கூட விடுதலைபுலிகளை விட்டுவைக்காத அசகாய சூரன். ஆபிரிக்காவில் பஞ்சம் வந்தால் என்ன , அந்தாட்டிக்காவில் பனி உருகினால் என்ன, அமேரிக்காவில் புயலடிச்சால் என்ன ஐரோப்பாவிலிருந்து இயங்கும் தமிழ் தேசியம் போர்வைக்குள் இருக்கும் புலிதான் என்பதை மிக சதுரியமாக கண்டுபிடிக்கும் திறன் அவனுக்கு மட்டுந்தான் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையில இருக்கிற IOC இற்கு விக்கிற பெற்றோலில இலாபம் காணாதாம் என்று பெற்றோல், டீசல் விலையைக் கூட்டி ஏற்கனெவே விற்பனைச் சந்தையில பிடித்து வைத்திருந்திருந்த 20% இழக்கப் போறாங்கள் என்று பார்த்தால் CEYPETO உம் எரிபொருள் விலையைக் கூட்டி அவங்களை காப்பாத்திடுவானுகள் என்று அறிவிச்சு இருக்கானுகள். இரவோடு இரவாக அடுப்பு எறிக்கிற எரிவாயு விலையையும் ஏத்திட்டாங்கள், இனி கொஞ்சம் யோசிச்சுத்தான் பத்தவைக்கோணும் போல கிடக்குது அடுப்பை.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆண்டு வருமான வரியையை அதிகரிச்சுப் போட்டானுகள். இத்தனை நாள அடிப்படைச் சம்பளத்திற்கு இருந்த வருமான வரியை இனி மொத்த வருமானத்திற்கும் விதிக்கிறதாக தீர்மாச்சிருக்காங்கலாம். ஆனாலும் அதில இருந்து தப்பிக்க வழியாக வாகன செலவு, செலபேசி செலவு, பிரயாணச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்குமிடச் செலவு என்று “செலவு” கணக்கு காட்டி ஊழியருக்கு “சம்பளத்தை” குடுக்க சில நிறுவனங்கள் முடிவு செய்திருக்காம். அதுக்கும் ஆப்பு அடித்தமாதிரி இனி வாகன வரியும் மேலதிகமாக வரப்போகுதாம்.

நட்புடன்
கிஷோக்குமார்


அதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்.....

குட்டிக் கதை -:

ஒரு நாட்டை கொடுங்கோல் மன்னன் ஒருவன் ஆட்சி செய்துவந்தான். அவன் இறக்கும் தறுவாயில் அடுத்து ஆட்சி பொறுபேற்கும் தனது மகனை அழைத்து இந்த நாட்டு மக்கள் என்னை மெச்சும்படி செய் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான்.

தன் தந்தையோ செய்தது கொடுங்கோல் ஆட்சி, அதனை நாட்டு மக்கள் எவ்வாறு மெச்சுவார்கள்.பலமாக யோசித்த அரசன்.. அரசவை மந்திரிகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தானாம்.

தான் தந்தையையைவிட  கொடுமையான ஆட்சி செய்தால் மட்டுமே மக்கள் தனது தந்தையை மெச்சுவார்கள் என்பதே அந்த முடிவு.

ஜெயலலிதா அம்மையாரின் சர்வாதிகாரப்போக்கையே பரவாயில்லை என்று சொல்ல வைத்த பெருமை இந்த எடுபுடியியின் ஆட்சிக்கு வந்துவிடுட்டது.

நால்லாயிருங்கடா டயர் நக்கீஸ்...

நட்புடன்
கிஷோக்குமார்.

Friday, April 20, 2018

வெள்ளவத்தையும் பணப்புழக்கமும்.

வெள்ளவத்தை : யாழ் மண்ணை விட்டு ஓடிவந்த எங்களின் கூடாரம். வெளிநாட்டுக்கு ஓடி தப்பியவர்கள் போக மீதி உயிர்வாழ்தலுக்கு உரிமையையுடைய யாழ்ப்பாணத்தார் வாழ்தலுக்கு தெரிசெய்து கொண்ட தலைநகரின் சிறு பகுதி. வெள்ளவத்தைக்கேயுரியனவான சில அழகியல் அம்சங்கள், எம்மவர்கள் வாழ்வென்று அடுக்குமாடி குடியிருப்புகள், மூலைக்கு மூலை சாப்பாட்டு கடை , மனங்கவர் புடவைக்கடைகள் , வாங்கிய வருத்தங்களுக்கு ஏற்ப மருந்தங்கள் புடைசூழயிருக்கும் வைத்தியசாலைகள் என்று ஏராளம்.

மிக சிறிய காலப்பகுதிக்குள் வானுயர்ந்து வளந்த அடுக்கு மாடிக் குடியிப்புக்கள். பூர்வீகமாக தனி வீடுகளில் வசித்து வந்தர்களின் படுக்கையறைவரை எம்மை எட்டிப்பார்க்கும் வசதியை எமக்கு ஏற்படுத்தி தந்து அவர்களின் நிம்மதியை பறித்து, எம்மை எம்மண்ணிலிருந்து வெளியேற்றியவர்களை அவர்களின் வீடுகளில் இருந்தாவது வெளியேற்றும் சிறு சந்தர்பத்தை கொடுத்த மகிழ்ச்சியில் சிலர்.தேவையின் கணதி அடுக்கு மாடி குடியிருப்பு விற்கும் வியாபாரிகளை தோற்றுவித்தது , அதிலும் எம்மவர் காசை ஏப்பம் இட்டு, ஆட்டையப் போடுவர்கள் என்று ஒரு சாரார் இப்படியாக எல்லாம் கலந்த கலவையாக வெள்ளவத்தை.

அப்படியிருக்கு வெள்ளவத்தையில் பொருடகளின் விலை பற்றித்தான் இன்றைய பேச்சு. அண்ணா அடிக்கடி சொல்லுவார் “வெள்ளவத்தையில் பொருட்கள் வாங்குவதை விடுத்து வெளியிடங்களுக்கு வாடகை வாகனம் எடுத்துச் சென்றுவரலாம்” என்று , ஆம் அப்படி விலை சொல்லுவாகள் இங்கு. இது இலங்கையில் அமைந்திருந்தாலும் விலை என்னவோ, டொலர்ஸ், பவுண்ஸில்தான் இருக்கும் என்று நகைச்சுவையாகச் சொல்லப்படும். பார்பதற்கு பொருட்கள் அழகாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும், அப்பொழுதானே சொன்ன விலைக்கு பொருட்களை வாங்குவார்கள்.

அதிலும் கடைகளிற்கு வரும் “அன்ரி” மாரின் புருசன்மார் வெளிநாட்டில இருப்பதால், அவர்களிடம் நல்ல காசிருக்கும், ஆனால் அவர்கள் வெள்ளவத்தையை விட்டு வெளிய போகமாட்டார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள், அதிக இலாபம் வைத்தே பொருட்களை அவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். அதே வேளை வெளி இடங்களுக்குச் சென்று பாசை தெரியாமல் தடுமாறி, ஏமாறுவதிலும் பார்க்க அதிக விலை கொடுத்தாவது வெள்ளவத்தையிலேயே வாங்கி விடுவதில் “அன்ரி” மாரும் முனைப்பு காட்டுவார்கள்.

இப்படியாக ஒருவர் சார்ந்த இன்னொருவர் நலனாக வெள்ளவத்தையில் பொருட்கள் யானை விலையில் விற்றுக்கொண்டுதானிருக்கின்றன...


நட்புடன் கிஷோக்குமார்
 

Sample text

Sample Text

Sample Text