Social Icons

Pages

Featured Posts

Monday, July 16, 2018

ஓடிய பிரிஜ்....

நான் இரசித்த காணொளி ஒன்று உங்களின் பார்வைக்காகவும்... பிடித்து வைக்கவில்லை, அதுதான் ஓடிவிட்டது...


Sunday, July 15, 2018

மொட்டந்தலையும் அடுத்தவன் முழங்காலும்

மொட்டநதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்னடா என்றால் அடுத்தவன் முழங்காலுக்கே முடிச்சு போடுறான் நம்ம வெடியகத்தான். அவன் வீட்டு அடுப்பு எரியவில்லை என்றால் கூட விடுதலைபுலிகளை விட்டுவைக்காத அசகாய சூரன். ஆபிரிக்காவில் பஞ்சம் வந்தால் என்ன , அந்தாட்டிக்காவில் பனி உருகினால் என்ன, அமேரிக்காவில் புயலடிச்சால் என்ன ஐரோப்பாவிலிருந்து இயங்கும் தமிழ் தேசியம் போர்வைக்குள் இருக்கும் புலிதான் என்பதை மிக சதுரியமாக கண்டுபிடிக்கும் திறன் அவனுக்கு மட்டுந்தான் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையில இருக்கிற IOC இற்கு விக்கிற பெற்றோலில இலாபம் காணாதாம் என்று பெற்றோல், டீசல் விலையைக் கூட்டி ஏற்கனெவே விற்பனைச் சந்தையில பிடித்து வைத்திருந்திருந்த 20% இழக்கப் போறாங்கள் என்று பார்த்தால் CEYPETO உம் எரிபொருள் விலையைக் கூட்டி அவங்களை காப்பாத்திடுவானுகள் என்று அறிவிச்சு இருக்கானுகள். இரவோடு இரவாக அடுப்பு எறிக்கிற எரிவாயு விலையையும் ஏத்திட்டாங்கள், இனி கொஞ்சம் யோசிச்சுத்தான் பத்தவைக்கோணும் போல கிடக்குது அடுப்பை.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆண்டு வருமான வரியையை அதிகரிச்சுப் போட்டானுகள். இத்தனை நாள அடிப்படைச் சம்பளத்திற்கு இருந்த வருமான வரியை இனி மொத்த வருமானத்திற்கும் விதிக்கிறதாக தீர்மாச்சிருக்காங்கலாம். ஆனாலும் அதில இருந்து தப்பிக்க வழியாக வாகன செலவு, செலபேசி செலவு, பிரயாணச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்குமிடச் செலவு என்று “செலவு” கணக்கு காட்டி ஊழியருக்கு “சம்பளத்தை” குடுக்க சில நிறுவனங்கள் முடிவு செய்திருக்காம். அதுக்கும் ஆப்பு அடித்தமாதிரி இனி வாகன வரியும் மேலதிகமாக வரப்போகுதாம்.

நட்புடன்
கிஷோக்குமார்


அதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்.....

குட்டிக் கதை -:

ஒரு நாட்டை கொடுங்கோல் மன்னன் ஒருவன் ஆட்சி செய்துவந்தான். அவன் இறக்கும் தறுவாயில் அடுத்து ஆட்சி பொறுபேற்கும் தனது மகனை அழைத்து இந்த நாட்டு மக்கள் என்னை மெச்சும்படி செய் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான்.

தன் தந்தையோ செய்தது கொடுங்கோல் ஆட்சி, அதனை நாட்டு மக்கள் எவ்வாறு மெச்சுவார்கள்.பலமாக யோசித்த அரசன்.. அரசவை மந்திரிகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தானாம்.

தான் தந்தையையைவிட  கொடுமையான ஆட்சி செய்தால் மட்டுமே மக்கள் தனது தந்தையை மெச்சுவார்கள் என்பதே அந்த முடிவு.

ஜெயலலிதா அம்மையாரின் சர்வாதிகாரப்போக்கையே பரவாயில்லை என்று சொல்ல வைத்த பெருமை இந்த எடுபுடியியின் ஆட்சிக்கு வந்துவிடுட்டது.

நால்லாயிருங்கடா டயர் நக்கீஸ்...

நட்புடன்
கிஷோக்குமார்.

Friday, April 20, 2018

வெள்ளவத்தையும் பணப்புழக்கமும்.

வெள்ளவத்தை : யாழ் மண்ணை விட்டு ஓடிவந்த எங்களின் கூடாரம். வெளிநாட்டுக்கு ஓடி தப்பியவர்கள் போக மீதி உயிர்வாழ்தலுக்கு உரிமையையுடைய யாழ்ப்பாணத்தார் வாழ்தலுக்கு தெரிசெய்து கொண்ட தலைநகரின் சிறு பகுதி. வெள்ளவத்தைக்கேயுரியனவான சில அழகியல் அம்சங்கள், எம்மவர்கள் வாழ்வென்று அடுக்குமாடி குடியிருப்புகள், மூலைக்கு மூலை சாப்பாட்டு கடை , மனங்கவர் புடவைக்கடைகள் , வாங்கிய வருத்தங்களுக்கு ஏற்ப மருந்தங்கள் புடைசூழயிருக்கும் வைத்தியசாலைகள் என்று ஏராளம்.

மிக சிறிய காலப்பகுதிக்குள் வானுயர்ந்து வளந்த அடுக்கு மாடிக் குடியிப்புக்கள். பூர்வீகமாக தனி வீடுகளில் வசித்து வந்தர்களின் படுக்கையறைவரை எம்மை எட்டிப்பார்க்கும் வசதியை எமக்கு ஏற்படுத்தி தந்து அவர்களின் நிம்மதியை பறித்து, எம்மை எம்மண்ணிலிருந்து வெளியேற்றியவர்களை அவர்களின் வீடுகளில் இருந்தாவது வெளியேற்றும் சிறு சந்தர்பத்தை கொடுத்த மகிழ்ச்சியில் சிலர்.தேவையின் கணதி அடுக்கு மாடி குடியிருப்பு விற்கும் வியாபாரிகளை தோற்றுவித்தது , அதிலும் எம்மவர் காசை ஏப்பம் இட்டு, ஆட்டையப் போடுவர்கள் என்று ஒரு சாரார் இப்படியாக எல்லாம் கலந்த கலவையாக வெள்ளவத்தை.

அப்படியிருக்கு வெள்ளவத்தையில் பொருடகளின் விலை பற்றித்தான் இன்றைய பேச்சு. அண்ணா அடிக்கடி சொல்லுவார் “வெள்ளவத்தையில் பொருட்கள் வாங்குவதை விடுத்து வெளியிடங்களுக்கு வாடகை வாகனம் எடுத்துச் சென்றுவரலாம்” என்று , ஆம் அப்படி விலை சொல்லுவாகள் இங்கு. இது இலங்கையில் அமைந்திருந்தாலும் விலை என்னவோ, டொலர்ஸ், பவுண்ஸில்தான் இருக்கும் என்று நகைச்சுவையாகச் சொல்லப்படும். பார்பதற்கு பொருட்கள் அழகாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும், அப்பொழுதானே சொன்ன விலைக்கு பொருட்களை வாங்குவார்கள்.

அதிலும் கடைகளிற்கு வரும் “அன்ரி” மாரின் புருசன்மார் வெளிநாட்டில இருப்பதால், அவர்களிடம் நல்ல காசிருக்கும், ஆனால் அவர்கள் வெள்ளவத்தையை விட்டு வெளிய போகமாட்டார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள், அதிக இலாபம் வைத்தே பொருட்களை அவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். அதே வேளை வெளி இடங்களுக்குச் சென்று பாசை தெரியாமல் தடுமாறி, ஏமாறுவதிலும் பார்க்க அதிக விலை கொடுத்தாவது வெள்ளவத்தையிலேயே வாங்கி விடுவதில் “அன்ரி” மாரும் முனைப்பு காட்டுவார்கள்.

இப்படியாக ஒருவர் சார்ந்த இன்னொருவர் நலனாக வெள்ளவத்தையில் பொருட்கள் யானை விலையில் விற்றுக்கொண்டுதானிருக்கின்றன...


நட்புடன் கிஷோக்குமார்

Thursday, January 10, 2013

ரிசானா நபீக் - மரணித்த மனிதம்

ரிசானா நபீக் விடுதை செய்யப்பட்டுவிடுவார் என்ற எதிர்பார்ப்பு, ஆசை, வேண்டுகோள், கோரிக்கை, பிரார்த்தனை என்று எல்லாவற்றுக்குமே முற்றுப்புள்ளி வைத்தது வந்த அந்த துயர்ச்செய்தி. கேட்டவுடன் மனத்தின் வலி கண்களில் கசிந்தது. மலரும் முன்னரே கசக்கப்பட்ட மொட்டு. சட்டத்தின் தீர்ப்புகள் நியாயத்தை காக்கின்றனவோ என்னவோ மனிதத்தை கொல்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

வறுமையின் பிடியிலிருந்து வாழ்வுதனை மீட்க முயன்று தோற்றுப்போன அந்த உயிரின் வலி சொல்லில் அடங்கும் என்று நான் நினைக்கவில்லை. கடைசிக் கணம்வரை தான் விடுதலையாகிவிடுவேன் என்று எண்ணியிருந்த அந்த மலரின் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது என்னவோ “கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும்” என்ற கமலின் வரிகளை நினைவுபடுத்தின. ரிசானாவிற்கான தண்டனை மரணம் என்பதை எந்த ஒரு நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரிசானா செய்ததாக சொல்லப்படும் கொலை, உண்மையானதுதானா என்ற கேள்விக்கு அப்பால் ஒரு கொலைக்கு தண்டனையாக சட்டத்தின் பெயரால் பதில் கொலை செய்தல் என்பதை எந்த மனிதனுமே ஏற்றுக்கொள்ளமாட்டான்.

பொதுவாகவே மரணதண்டனை என்பதில் எனக்கு எப்பவுமே உடன்பாடு இருந்ததில்லை, இருந்தாலும் நோக்கம் கருதி, திட்டமிட்டு, காட்டுமிராண்டிதனமான, இரக்கமற்று, வக்கிரபுத்தியுடன் செய்யப்படும் கொலைக்களுக்கு வேண்டுமானால் மரணம் சில வேளைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தண்டனையாக இருக்கலாம் என்று எண்ணியதுண்டு. செய்த குற்றமே, இவனுக்கு மரணதண்டனை கொடுத்தால் என்ன என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது, அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் மரணதண்டனையை ஆதரிக்கலாம் போன்றே தோணும்.

அண்மையில் தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பத்தில் அந்த காமுக மிருகங்களை நடு வீதியில் வைத்து    சுடவேண்டும் போலிருந்தது. அப்படியானதுகள் வாழ்வதற்கே தகுதியியற்றவை என்று நினைத்திருந்தேன். அந்த மிருகங்கள் செத்தாலும் சில தாய்மார் அழுவார்கள் என்று எண்ணவே தோன்றவில்லை. அப்படிப்பட்ட மிருகங்களை இந்த பூமிக்கு தந்த அந்த தாய் அழுதேதான் ஆகவேண்டும். அது சரியா, தவறா என்பதை விவாதிக்கவோ , விபரிக்கவோ நான் முற்படவில்லை.

அதேபோல் அஜ்மல் கசாப் இன் மரணம் கூட  , அவனும் அவனின் குழுவினரும் ஆடிய வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகளை நினைக்கையில் அவனுக்கான தண்டனை சரி என்றே பட்டது. மரணதண்டனை சரியானதா ? நியாமானதா? மனிதாமிமானமற்றதா? என்ற கேளிவிகளுக்கெல்லாம் அப்பால் குற்றவாளி மீது சட்டப்போர்வைக்குள் நாம் பழிவாங்கத் துடிப்பது கொலை வெறியாக இருக்கையில் மரணதண்டனை என்ற பெயரில் அந்த கொலையைச் செய்கிறோம். அப்படியான பழிவாங்கல்களில் பெரும்பாலனவை அதிகார வர்கங்களுக்கு சார்பானதாகவும், அப்பாவி சமூகத்திற்கு எதிரானதாகவும் அமைந்துவிடுவதால் என்னவோ அத் தண்டனையை மேலும் வெறுத்திருக்கிறேன்.

ஆனால் ரிசானாவின் நிலையோ வேறு , சாட்டப்பட்ட குற்றம் ரிசானாவில் சிறுபிள்ளைத்தனமான,பக்குவம் இன்மையால் ஏற்பட்ட தவறாக கூட இருக்கலாம் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அந்த சகோதரி அறியாமல் செய்த அந்த தவறுக்காக உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவள் என்ற முடிவு தண்டணையானது நியாயமே இல்லை.

ரிசானாவில் கொலையில் இஸ்லாமும், சவுதியின் சட்டங்களும் கண்டனத்துக்குள்ளானதில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்கள் அந்த அந்த நாட்டிற்குரியவை. பணபலம், படைபலம் என்றிருக்கும் அமேரிக்கா , அவுஸ்திரேலியா போன்ற  நாடுகளின் வேண்டு கோள்களையே நிராகரித்து போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கில் போட்ட சிங்கப்பூரை பராட்டுவதா, தூக்கில் போட்டத்தற்காக தூற்றுவதா  என்ற மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் ரிசானாவை தூக்கில் போட்ட நிகழ்விலும் சவுதிக்கு வக்காளத்து வாங்கி அடுத்தவர் சட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பில் நாம் தலையிடக்கூடது என்று மேதாவித்தனம் கதைப்பவர் காண்கையில் பத்திக்கொண்டு வருகிறது.

இந்தியா கசாப்பை தூக்கில் போட்டால், அதற்கு கத்தலாம், கதறலாம், எதிர்ப்பு போராட்டமே நடத்தலாம் அது அத்துமீறலாகாது சவுதி தூக்கிட்டால் மட்டும் பொத்திக்கொண்டு இருக்கவேணும், என்னங்கடா நியாயம்.  உங்களுக்கெல்லாம் நெஞ்சென்று ஒன்று கிடையாதா, அதில் ஈரம் ஒன்று இருக்காதா? ஒரு மரணத்திற்கு ஒரு மார்க்கத்தையே கேள்வி கேட்கமுடியாது,  ஆனால் அந்த மார்க்கத்தின் பெயரால் மனிதத்தை தொலைப்பவர்களை யார் வேண்டுமானும் நிற்க வைத்து கேள்வி கேட்கலாம். இப்படியானவர்களிடம் மார்க்கத்தில் உள்ள நல்ல விடயங்களை தேடினாலும் கிடைக்காது. எந்த மதமும் அன்பை வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு இம்மார்க்கம் மட்டும்  விலக்கல்ல. 

சட்டம், மதம், சமூகம், மனிதம் என்று எந்த கண்கொண்டு பார்த்தாலும் ரிசானா நபீக் மலரும் முன்னே கருக்கப்பட்ட மொட்டுத்தான். அந்த சகோதரியின் உயிர் அமைதியடைய என் பிரார்தனைகள்.நீசர்கள் நிறைந்த இந்த பூமியிருந்து விடுதலையடைந்திருக்கிறாய் சகோதரி, நின்னுயிர் நிம்மதியாய் உறையட்டும்.

நட்புடன் கிஷோக்குமார்.

Friday, December 21, 2012

மாற வேண்டியது நம் பார்வையே.

பெண்பாலர் பாலியல் சார் சர்ச்சைகளில் சிக்குவது என்பது ஒன்றும் புதிதல்ல. பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது பாலியல் ரீதியில் மட்டுமே வரவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா ? மனம் மறுதலிக்கிறது எதைச்சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.முக்கியமாக பெண்கள் சார்பான எம்முடைய எல்லா பார்வையுமே அழகு, கவர்ச்சி, ஆபாசம் என்று ஏதோவொரு வகைக்குள் அடக்கப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியதே. எல்லாவற்றையும் பாலியல் தொடர்புடன் பார்க்கும் எம் சமூகத்தின் அக்கறை சரியென்று தோன்றவில்லை. வெறுப்பைத்தரும் சமூக பிறழ்வு என்றே எண்ணத்தோன்றுகிறது.

இன்றைய இந்த சமூகப்பிறழ்விற்கு ஊடகம் என்ற சதிவலையமைப்புதான் மிக முக்கியமான காரணமாகிறது, ஊடகங்கள்தான் இந்த மாதிரியாக தோற்றப்பாடை முற்றிலுமாக உருவகித்து நிற்கின்றது, என்கிற எம்மிடையேயான குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறேன். எத்தனையோ எம் தனிப்பட்ட வாழ்க்கை விடயங்களில் கூட எம்மை சுற்றி இருக்கிற சமூகம், உறவினர்களாகவிருக்கட்டும் , நண்பர்களாகவிருக்கட்டும் எத்தனை விதமாக கதைத்திருக்கிறார்கள் என்பதை நான் அனைவருமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் உணர்ந்திருப்போம். ஏன் நாம் கூட எந்த விதமான குற்றவுணர்வும் இல்லாமல் , அதன் தாக்கம் எந்தளவில் இருக்கும் என்றில்லாமல் எத்தனையோ விடயங்களை எந்தவொரு ஆதாயமும், ஆதாரமும் இல்லாமல் கதைத்திருப்போம். அப்படிருக்கையில் எமக்கு பிடித்த அந்த விடயத்தை அல்லது நாம் தனி மனிதராக, சிறு சமூகமாக செய்யும் அந்தச் செயலை பெரியளவில் செய்து காசு பார்க்கும் ஊடகங்களை குற்றம் சொல்லும் உரிமை எமக்கில்லை என்றே எண்ணுகிறேன்.

முக்கியமாக பெண்பாலர் பற்றி பேசும் போது நாம் எதைப்பற்றியுமே யோசிப்பதாக எனக்கு தெரியவில்லை.எடுத்துக்காட்டாக கணவனின் தம்பி சைக்கிளில் ஏற்றிச்செல்லும் அண்ணிக்கு சமூகத்தின் வசை, படிக்கிற காலத்தில் எல்லாப்பெண்களுமே எங்கள் நக்கலை கேட்டும் கேட்காமல் போகையில் ஒருத்தி மட்டும் பதிலளித்துவிட்டால் அத்தோழிக்கு நாம் வைக்கும் பெயர் என சின்ன சின்ன விடயங்களில் ஆரம்பிக்கும் எம் பாலியல் தொடர்புடுத்தலே எம் இன்றைய சமுதாய நோயாக வளார்ந்து நிற்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. 

எனக்கு தெரிந்த ஒரு பெண், தன் அயல் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்பிள்ளைக்கு பேசி வந்த வெளிநாட்டு கலியாணத்தை குழப்பி தன்மகளுக்கு அந்த திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்பதற்காக , வெளியூரில் படித்துக்கொண்டிருந்த அடுத்தவீட்டுப் பிள்ளை பற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் வந்து கட்டிய கதைகளை நேரில் கேட்டிருக்கிறேன். அங்கும் பாலியல் புகார்தான். ஒரு சாதரண குடும்ப பெண் தன் எதிராளியை தாக்கும் ஒரு கருவியாக, தன் காரியம் சாதிக்க சர்வசாதாரணமாக அந்த ஆயுதத்தை கையில் எடுக்கிறாள் என்றால் , மிக இலகுவாக , மலிவாக அதே நேரம் மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய பலம் அந்த ஆயுதத்திற்கு இருக்கிறது என்றுதானே பொருள்.

பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கோ , நிராகரிப்பதற்கோ போதிய ஆதாரம் கிடைப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் சந்தேகத்தை பாலியல் குற்றத்தை நிரூபிப்பதற்கு சாதகமாக்கி முடிவை எடுத்துவிடுகிறோம்.அதை வைத்து அலச, ஆராய துடிக்கும் எம் மனதின் வக்கிரத்திற்கு தீனியாக்கிவிடுகிறோம் என்பதே உண்மை.

இன்று இராணுவத்தில் இணைக்கப்பட்ட அந்த யுவதிகளின் நிலை. பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள்.உண்மையில் அவர்கள் மனநிலையில் ஏற்பட்ட சில மாற்றங்களுக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நம்பத்தகுந்த சிலரூடாக அறியமுடிந்த போது வேதனையாக இருந்தது. ஏற்கனவே போரில் பாதிக்கப்படிருந்த அந்த மனம் மேலும் ஒரு படி கூடுதலாக பாதிக்கப்படுவதற்கு பாலியல் இம்சைதான் காரணமாக வேண்டும் என்ற எந்த தேவையுமில்லை. அப்படி பாலியல் இம்சை செய்வதற்கு இப்படி உலகறிய ஆட்களை எடுத்துத்தான் செய்யவேண்டும் என்ற தேவையும் ஆளும் வர்க்கத்திற்கு இல்லை என்ற உண்மையை கூட புரிந்து கொள்ளமுடியாதளவிற்கு எம் கண்களை என்ன மறைக்கிறது ? இன்றைய அவர்களில் நிலைக்கு காரணமானவர்கள் வேறு யாருமில்லை, நிச்சயமாக நாம்தான்.

அவர்களை இராணுவம் சேர்க்கும் வரை வாய் பொத்தியிருந்த நாம் , அதன் பிறகு அவர்களல்தான் எம் ஒட்டுமொத்த சமூகமுமே தலை குனிந்தாக இட்டுக் கட்டினோம். அவர்கள் குடும்பம் , சூழ்நிலை பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் எம் மனதிற்கு வந்தபடி குறை சொன்னோம், இன்று அவர்களை இந்த நிலமையில் கூட விட்டு வைக்க நாம் தயாரில்லை என்பதையே பாலியல் குற்றச்சாட்டு ஊடாக நிறுவியுள்ளோம்.என்னவென்று சொல்வது , இவை எல்லாமே எம் மனத்தின் விகாரப்பட்ட தன்மைக்கு சான்றாகின்றன என்கிறது என் மனசு. அவர்களின் இன்றைய மனநிலை பாதிப்புக்கு அவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட போதே எம்மால் வைக்கப்பட்ட பாலியல் ரீதியான சந்தேக குற்றச்சாட்டு மிக முக்கியமான காரணம் என்பதை கூட நாம் ஏற்க தயாரில்லை.இன்று நேற்றல்ல நெடு நாட்களாகவே குணப்படுத்த முடியாத  இந்த வியாதி எம்மை பீடித்திருக்கின்றது என்பது என்னவோ கசக்கும் உண்மைதான். இன்று எம் மொத்த சமூகத்தையுமே தலை குனிய வைத்திருக்கும் இந்த மனநிலையை நன்கு பயன்படுத்தி பிரபலம் தேட எழுத்தாளர்கள் என்று ஒரு கூட்டம், அதை வைத்து காசு பார்க்க ஊடகம் என்றொரு கூட்டமும் போட்டி போட்டு நிற்கின்றன என்றால் மறுப்பதற்கில்லை.

எவ்வாறு  இந்த எழுத்தாளர்களால் எழுதமுடிகிறது, ஊடகங்களால் காசு பார்க்க முடிகிறது என்றால் அடுத்தவன் பூராயம் பார்க்கும் என் மனநிலைக்கு பெண்கள் பாலியல் தொடர்பிலான செய்திகள் என்றால் தேன் ஆகிவிடுகிறது. அக்கறை என்ற பேயரில் அசிங்க அசிங்கமாக எழுதுபவர்கள் ,கதைப்பவர்கள் எல்லோருடைய நம்பிக்கையுமே  நாம்தான். பாலியல் தொடர்பு இல்லாமல் அப்படியே ஊடங்களும் சரி , எழுத்தாளர்களும் சரி உண்மையை உள்ளபடியே சொல்லிவிட்டார்கள்  என்றே வைத்துக்கொள்வோம், எங்களில் எத்தனை பேர் அதை அப்படியே நம்பிவிடுவோம் , எங்கொவொரு மூலையில் யாரோ ஒரு நாதாரி அதை பாலியல் தொடர்படுத்தி அசிங்கமாய் எழுதியிருக்கும் அதை மோப்பம் பிடித்து நாக்கை தொங்கப்போட்டு வாசிப்பதுமல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து அந்த நாயை பெரியாளாக்கிவிடுவோம். அது அக்கறை , எதிர்ப்பு அல்லது உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று எந்த பெயரிலும் இருக்கலாம்.அதுவே இன்னொரு ஊடகத்திற்கு அப்படித்தான் இப்படியான விடயங்களை காட்ட வேண்டும் என்று நாமே ஏற்படுத்திக்கொடுக்கும் எடுத்துக்காட்டாகிவிடுகிறது.

மற்றவர்களை குற்றம் சொல்வதை விட்டு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடியையையும் சரியாக வைத்தோமானால் , நாம் சார்ந்த மொத்த சமூகமுமே சரியான பதைக்கு வருவதற்கு நிறையவே சாத்தியமிருக்கிறது. முதலில் பெண்கள் தொடர்பிலான எல்லா பிரச்சனைகளையுமே பாலியல் தொடர்புபடுத்தி பார்க்கும் எம் பழக்கத்தை மாற்றிக்கொள்வோம்.

நட்புடன் கிஷோக்குமார்.

Thursday, November 8, 2012

கண்ணைக்குத்தும் கைநீட்டல்கள்.

கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ராஜன் -  சின்மயி விடயமாக  இருக்கட்டும்,தொழிலதிபர்  -கார்த்திசிதம்பரம் விவகாரமாக இருக்கட்டும் அவையனைத்துமே அடுத்தவன் கண்ணைக்குத்தும் அளவிற்கு எல்லை மீறிய கைநீட்டல்களாகவே எண்ணத் தோன்றுகிறது.இதுவரைகாலங்களிலும் ஊடகம்,சமூக வலைத்தளங்கள் என அனைத்திலுமே எல்லை மீறிய நம் கைநீட்டல்கள்,அடுத்தவன் கண்ணை குத்தியிருந்தும்,சட்ட ரீதியான நடவடிக்கைக்குள் போகுமளவிற்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.அதன் விளைவு; ஊடக சுதந்திரம்,அநியாயத்தை தட்டிக்கேட்டல் என்ற போர்வையில் எதிர்ப்படுவோர் எல்லோர் கண்களையும் குத்த ஆரம்பித்தோம்.எதற்கும் ஒரு எல்லையிருக்கிறது. அளவிற்கு மீறிய நம் கைநீட்டல்கள் கொண்டு வந்ததுதான் இன்றைய நிலை.

// ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டால் அடங்கிடுவாய் மனிதா //

இதனால் ஏற்படப்போகும் விளைவுகளில் முக்கியமாக,அதிகரிக்க போகும் ஊடகங்களுக்கான அடக்குமுறை  தெளிவாகத் தெரிகிறது.மேற்சொன்ன விவகாரங்களை பலர் அரசியலாக்கியும்,ஆணாதிக்கமாக்கியும்,பெண்ணடிமைத்தனம் பேசியும் தமக்கு பலன்தரக்கூடிய வகையில் பெருப்பித்து தற்காலிக இலாபம் தேடிக்கொண்ட போதிலும்,நீண்ட கால அடிப்படையில்,நாம் தற்காலிக இலாபத்திற்காக பெருப்பித்த இவ் விடயம்,எறிந்த பூமராங் ஆக எம்மையே திரும்பவும் வந்தடையப்போகிறது என்பதை எம்மில் எத்தனை பேர் அறிந்துளர்

சற்று உற்றுப் பார்த்தோமானால் இவ்வாறான நிகழ்வுகள் இன்று புதிதாய் தொடங்கியதல்ல என்பதும், பலகால “ஊடகச்சுதந்திரம்” என்ற நோயின் முற்றிய தாக்கமே இதுவென்றும் தெளிவாக தெரியவரும். முகப்புத்தகம் உட்பட இலத்திரனியல் ஊடகங்கள் முதல் அச்சு ஊடகங்கள் வரை அனைத்திலுமே போட்டுத்தாக்காதவர்கள் என்று இதுவரை எவருமில்லை . அதிகாரத்திலுள்ளவர்,ஆட்சியாளர்கள்,பிரபலங்கள் என்று நீண்டு செல்லும் அந்த நிரல்,மற்றவர் குறைகண்டு இரசித்தல்,சிரித்தல்,மகிழ்தல் போன்ற நம் நற்பண்புகளை காட்டி நிற்கிறது. பரிகசிப்பது,அவதூறு செய்வது பின்னர் மன்னிப்பு,மானநட்டம், என்று எதையாவது செய்து சரிக்கட்டுவது ஊடங்களில் மாத்திரமல்ல எம் அன்றாட வாழ்விலும் நிகழ்வதுதான். நாம் தனிமனிதராய், குழுவாய் செய்வதை ஊடகங்கள் வியாபாரமாய் செய்கின்றன.பிரச்சனை என்று வருகின்ற போது அச்சு ஊடங்கள் அழிக்க முடியாத இலகு ஆதாரமாகிவிடுவதால் எதிர்த்து நின்று அதையும் விளம்பரப்படுத்தி காசு பார்க்கின்றன, இலத்திரனியல் ஊடகங்கள் ஆதாரங்களை அழித்து அமைதியாகிவிடுகின்றன.

எமது ஊடகச் சுதந்திரமானது அடுத்த வீட்டுக்காரனைப்பற்றியோ, அவன் வீட்டு விவகாரங்கள் மற்றும்அவன் சொந்த பிரச்சனைகள்  பற்றியோ எம்வீட்டிலிருந்து கொண்டு பொதுகூட்டமே போடலாம் என்ற நிலையில்தான் இதுவரை இருந்து வந்தது.ஆனால் அண்மைய நிகழ்வுகளில் அடுத்தவீட்டுகாரனைப் பற்றிய நம் நரிக் கரிசனையை அவன் வீடுவரை சென்று காட்டுமளவிற்கு போனதும் பிரச்சனை பூதாகாரமாக்கியதற்கு ஒரு காரணமாகியிருக்கலாம்.

வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் , மலிந்திருக்கும் இலத்திரனியல் ஊடக வாய்ப்புகள் என அனைத்துமே எம்மை அடுத்தவன் படுக்கையறைக்குள் கமேரா வைக்குமளவிற்கு கொண்டு போயிருக்கிறது.எமது பரபரப்புப் பசிக்கு தீனி போட அடுத்தவன் படுக்கையறை வரை செல்ல துணிந்து விட்டோம். எமக்கு தேவையான பரபரப்பு,சுவாரசியம் ஒரு நோயாகவே எம்முள் வளர்ந்து விட்டது என்றால் மறுப்பதற்கில்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கட்டும்,இலத்திரனியல் ஊடங்களாக இருக்கட்டும் நிறையவே சுதந்திரம் தந்திருக்கிறது.அவற்றை சரியாக பயன்படுத்தாவிட்டிருந்தாலும் பரவாயில்லை,பிழையாக பயன்படுத்தி எம் தலையில் நாமே மண்வாரிக்கொண்டோம் என்பதை,நாளை அதிகார அடக்குமுறைகள் எமக்கு உணர்த்தி நிற்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

“ஊடகச்சுதந்திரம்” என்ற நோயிற்கு  அடக்குமுறை வைத்தியம் பார்க்க நீண்ட நாட்களாகவே காத்திருந்த அதிகார பைத்தியங்களுக்கு நாமே கதவு திறந்து விட்டுள்ளோம் என்பதுதான் இங்கு கவலைக்குரிய விடயம். இனி வரும் காலங்களில் கண்ணைக்குத்தும் கைகள் மட்டுமல்லாமல்  நீட்டப்படும் கைகள் அனைத்துமே வெட்டப்படும் என்பதே உறைக்கும் உண்மை.

நட்புடன்
கிஷோக்குமார்.
 

Sample text

Sample Text

Sample Text